Last Updated:
CJP protest | டெல்லியில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், தடியடியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் ஆம் ஆத்மி கட்சி செய்யும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேவைப்பட்டால் கரப்பான்பூச்சி ஜனதா தள கட்சியின் போராட்டத்தில் தான் பங்கேற்பேன் என்று கூறினார்.
இதே போன்று, டெல்லியில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், தடியடியில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் ஆம் ஆத்மி கட்சி செய்யும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அரசாங்கத்தின் ஈகோவால், இளைஞர்கள் கடுங்கோபத்தில் இருப்பதாக சாடினார்.
இதற்கிடையே டெல்லியில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக, சென்னை தியாகராய நகரில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Delhi,Delhi,Delhi


