45 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் எடுத்து வந்த இரு வெளிநாட்டு பயணிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 29 மற்றும் 42 வயதுடைய சீன நாட்டு வர்த்தகர்கள் ஆவர்.
அவர்கள் இன்று அதிகாலை 01.20 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ-469 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களை காவலில் வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

