யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.
குறித்த பகுதிக்கு நேற்றிரவு(04) முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீடொன்றின் கதவினை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
அதனைதொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், இது குறித்து வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

