
விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ச விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் சிறைச்சாலை பேருந்து மூலம் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ராஜபக்ச பின்னர் பாராளுமன்றச் சபா மண்டபத்திற்கு வந்து அமர்ந்துகொண்டார்.
அவர் பாராளுமன்ற வளாகத்திற்கு காலை 9.20 மணியளவில் வருகை தந்துள்ளார்.
சபாநாயகரின் கோரிக்கைக்கு இணங்கவே அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் சேனக பல்தெனிய தெரிவித்தார்.
நாமல் ராஜபக்சவிற்கு பாராளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

