
பதுளை- கோட்டைக்கும், கோட்டை- பதுளைக்கும் இடையில் இன்று வௌ்ளிக்கிழமை (27), நாளை சனிக்கிழமை (28) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (29) ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று வௌ்ளிக்கிழமை (27) இரவு 7.30 மற்றும் நாளை சனிக்கிழமை (28) காலை 7.45 மணிக்கும், பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து சனிக்கிழமை (28) காலை 7.05 மணிக்கும், கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கும் விசேட புகையிரதம் புறப்பட உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

