
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவரை மஹர நீதவான் நீதிமன்றம் மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான நிலத்தை தனியார் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் குற்றப் புலனாய்வுத் துறையினரால், புதன்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டார்.
மஹர நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (06) மாலை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

