மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (14) மாலை 3 மணிக்கு மேல் கன மழை பெய்து வருகிறது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையுடன் கூடிய பனிமூட்டமும் நிலவுகிறது.
காட்மோர், சாமி மலை, பெய்ட்லோன், மரே, நல்லதண்ணி மற்றும் ஹப்புகஸ்தனை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. அத்துடன், விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களும் விவசாயிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்கனமழை காரணமாக அப்பகுதிகளிலுள்ள ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கங்கைகளில் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

