2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் புதன்கிழமை (2) பிற்பகல் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தங்களது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்றது. இதில் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

