
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவில் புதன்கிழமை (17) நடைபெற்ற போர்த்துக்கல்லுடனான குழு கே போட்டியை 52 ஆண்டுகளுக்குப் பின்னர் உலககக் கிண்ணத்தில் பங்கேற்ற கொங்கோ ஜனநாயகக் குடியரசு சமப்படுத்தியது.
இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில் ஜோவா நெவிஸ் பெற்ற கோலின் மூலம் போர்த்துக்கல் முன்னிலை பெற்றபோதும் கொங்கோவின் ஒழுங்கமைந்த பின்களத்தை போர்த்துக்கல்லால் உடைக்க முடியவில்லை.
இந்நிலையில் முதற்பாதி முடிவில் ஜோன் விஸ்ஸா கொங்கோவுக்காகப் பெற்ற முதலாவது உலகக் கிண்ணக் கோலோடு 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை கொங்கோ சமப்படுத்தியது. ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இரண்டு உதைகளும் கோல் கம்பத்துக்கு வெளியாலேயே சென்றிருந்தன.

