
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கருத்திற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்து மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொடூரமான சூறாவளியின் தாக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடாக, நேபாள மக்களுடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நேர்ந்த சோகமான உயிரிழப்புகள் குறித்து அறிந்துகொண்டு நான் மிகவும் வருத்தமடைகிறேன். நேபாள மக்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவிப்பதில் இலங்கை மக்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன்” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

