நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில் இதுவரை 160 பேர் உயிரிழந்த நிலையில், நுற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 160 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், வெளிநாட்டவர் உள்பட நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென்னா பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள அரசு மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆனால், வெள்ள நீர் மட்டம் அதிகமாக உள்ள இடங்களில் ஹெலிக்கொப்டர்களால் தரையிறங்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம், பொலிஸ் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். (a)


