
டி.கே.பி.கபில
ரூபாய் 7,740,000 (ஏழரை இலட்சத்திற்கும் அதிகமான) பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்புப் சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பிராந்தியத்தில் எதையும் பிரகடனப்படுத்தத் தேவையில்லாத ‘பச்சை வழி’ (Green Channel) ஊடாக வெளியேற்ற முயன்ற வெளிநாட்டு விமானப் பயணிகள் இருவர் ஓகஸ்ட் 28 அன்று காலை விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் 30 மற்றும் 35 வயதுடைய சீனா நாட்டைச் சேர்ந்த பெண் வியாபாரிகள் ஆவர்.
இவர்கள் இந்த சிகரெட்டுகளை சீனாவில் கொள்வனவு செய்துவிட்டு, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு வந்து, அங்கிருந்து மலேசிய விமானச் சேவைக்குச் சொந்தமான MH-497 இலக்க விமானம் மூலம் ஓகஸ்ட் 28 அன்று காலை 10:10 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் தம்முடன் கொண்டுவந்த 4 பயணப் பொதிகளுக்குள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 புகையிலை அட்டைகள் (Cartons) மறைத்து வைக்கப்பட்டுருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த இருவரையும் காவலில் வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

