வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு (2026 ஏப்ரல் 26) வருகை தந்த உள்ளூர் இழுவை மடி மீன்பிடி படகொன்றைப் பரிசோதித்தபோது, சுமார் 7 கிலோவிற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களை (Alopias Vulpinus) வைத்திருந்த நான்கு (04) மீனவர்கள் கடலோர பாதுகாப்புப் படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீன்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


