
கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது நபரொருவர் தாக்கியுள்ளார்.
அச்சமயத்தில் அங்கு கடமையிலிருந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி, அவருக்கும் தாக்குதல் நடத்தப்பட்டமையினால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.
இருப்பினும், சம்பவத்தின் இறுதியில் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

