• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஈரானின் பிங்க் ட்ரோன்: பெண்கள் தினத்தில் வித்தியாசம்

GenevaTimes by GenevaTimes
April 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஈரானின் பிங்க் ட்ரோன்: பெண்கள் தினத்தில் வித்தியாசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


ஈரானின் அஹ்வாஸ் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட ஷாஹெட்-136 ரக ட்ரோன்களின் புகைப்படங்களை ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. “பெண்கள் தினத்தை” (Girls’ Day) முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில், தேசிய பாதுகாப்பில் இளம் பெண்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த மாற்றியமைக்கப்பட்ட போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.


“புரட்சிகரப் பெண்கள்” என ஏற்பாட்டாளர்களால் விவரிக்கப்பட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, சிரேஷ்ட விண்வெளித் தளபதி ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.


இந்த இளஞ்சிவப்பு ட்ரோன்களில் ஒன்று, விழாவில் பங்கேற்றவர்களுக்கு அடையாள ரீதியாகப் பரிசாக வழங்கப்பட்டது. ஈரானிய இளைஞர்களின் புரட்சிகர அடையாளத்தை வலுப்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பில் அவர்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


ஷாஹெட்-136 என்பது அண்மைக்காலமாகப் பிராந்திய மோதல்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு தற்கொலைத் தாக்குதல் (Loitering munition) ட்ரோன் ஆகும்.


போர் ட்ரோன்களுக்கு இளஞ்சிவப்பு நிறமிட்டு கலாசார விழாவோடு இணைத்ததை, பாதுகாப்புத் துறையில் ஒரு புதுமையான அணுகுமுறை என உள்நாட்டு விமர்சகர்கள் சிலர் பாராட்டியுள்ளனர்.


ஒரு போர் ஆயுதத்தைப் பண்பாட்டு நிகழ்வு மற்றும் சிறுமிகளுடன் தொடர்புபடுத்துவது முறையற்றது என இணையதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.


இராணுவச் சின்னங்களைப் பொதுக்கல்வி மற்றும் கலாசாரத் திட்டங்களுக்குள் ஒருங்கிணைக்கும் ஈரானிய அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சியை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இராணுவ நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே இதன் நோக்கம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இராணுவத் தளவாடங்களை உள்நாட்டுக் கலாசார முன்னெடுப்புகளுடன் இணைக்கும் ஈரானின் இந்தத் தந்திரோபாயத்தை சர்வதேசப் பார்வையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.


 



Read More

Previous Post

குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுனர், சிவப்பு விளக்கை மீறி விபத்தை ஏற்படுத்தியதற்காக ரிம 13,000 அபராதம் விதிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

அர்ஜென்டினா: கார் பந்தயத்தில் பார்வையாளர் பரிதாப மரணம்! | World News (உலக செய்திகள்)

Next Post
அர்ஜென்டினா: கார் பந்தயத்தில் பார்வையாளர் பரிதாப மரணம்! | World News (உலக செய்திகள்)

அர்ஜென்டினா: கார் பந்தயத்தில் பார்வையாளர் பரிதாப மரணம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin