
மட்டக்களப்பு புவியியல் திணைக்கள அதிகாரி ஒருவர் செய்த முறையீட்டின் பேரில், மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமணரதன தேரரினால் நிர்மாணிக்கப்பட்ட குளம் ஒன்றுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு புவியியல் திணைக்களத்தின் தலைவர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அம்பிட்டியே சுமணரதன தேரர் சில ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு பன்சல்கல் ராஜமகா விகாரைக்கு அருகில் குளம் ஒன்றை நிர்மாணித்து, பிரதேச விவசாயிகளின் நெற்செய்கை மற்றும் நிலப்பயிர்ச் செய்கைக்கும், விகாரையின் செய்கை நடவடிக்கைகளுக்கும் நீர் பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை (08) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

