
”
நேற்றைய தினம் நிலவிய மற்றும் இன்று நிலவும் கடும் மழை நிலைமையைக் கருத்திற்கொண்டு, உங்களது பாடசாலையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பாதுகாப்புத் தொடர்பான ஆபத்தான சூழ்நிலை காணப்பட்டாலோ, இன்று (2026.08.03) பாடசாலைக்கு விடுமுறை வழங்குமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி அறிவிக்கப்படுகிறது.
டி. எம். எஸ். டி. திசாநாயக்க
வலயக் கல்விப் பணிப்பாளர் – நுவரெலியா
2. ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிவித்தல்
அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் – அவசரமும் முக்கியத்துவமும் வாய்ந்த அறிவிப்பு!
மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி, தொடர்ச்சியான மழையால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருப்பதையும், பாடசாலையின் தற்போதைய நிலைமையையும் கருத்திற்கொண்டு, இன்று (2026.08.03) ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட உங்கள் பாடசாலைக்கு விடுமுறை வழங்குவது குறித்து உரிய தீர்மானம் எடுக்குமாறு அனைத்து அதிபர்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எஸ். ஜெயக்குமார்
வலயக் கல்விப் பணிப்பாளர்,
வலயக் கல்வி அலுவலகம்,
ஹட்டன்.

