• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Screen Printing: மின்சாரமும் வேண்டாம்.. மிஷினும் வேண்டாம்… தீப்பெட்டி தொழிலால் கிடைத்த பிரிண்டிங் முறை…

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Screen Printing: மின்சாரமும் வேண்டாம்.. மிஷினும் வேண்டாம்… தீப்பெட்டி தொழிலால் கிடைத்த பிரிண்டிங் முறை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 31, 2025 4:59 PM IST

Screen Printing: ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட அச்சுத் தொழில் நுட்பங்களும் மாற்றமடைந்து விட்ட நிலையில், ஸ்கிரின் பிரிண்டிங் தொழில்நுட்பம் மட்டும் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

X

மின்சாரமும்

மின்சாரமும் வேண்டாம்.. மிஷினும் வேண்டாம்… தீப்பெட்டி தொழிலால் கிடைத்த பிரிண்டிங் முறை…

பட்டாசு தொழிலுக்குப் பெயர் போன சிவகாசி, அச்சுத் தொழிலுக்கும், தீப்பெட்டித் தொழிலுக்கும் புகழ் பெற்றது என்பது நாம் அறிந்த ஒன்றே. பட்டாசு, தீப்பெட்டித் தொழிலை மையமாக வைத்தே அச்சுத் தொழில் சிவகாசியில் தொடங்கப்பட்டது.

இன்று தீப்பெட்டித் தொழில் இங்கு வந்து நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், அச்சுத் தொழிலும் நவீன வளர்ச்சி அடைந்துள்ளது. ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட அச்சுத் தொழில் நுட்பங்களும் மாற்றமடைந்து விட்ட நிலையில், திரை அச்சிடுதல் தொழில்நுட்பம் மட்டும் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

திரை அச்சிடுதல்: ஆங்கிலத்தில் ஸ்க்ரீன் பிரிண்டிங் என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தில், அச்சிட வேண்டிய எழுத்துக்கள் மற்றும் படங்களை ஒரு துணித் திரையில் அச்சாகத் தயார் செய்து கொண்டு, அதன் மீது மை ஊற்றி அச்சிடும் இந்த முறை தொடக்கத்திலிருந்து இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

இதையும் படிங்க: Natural Compost: விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு உரம்… இறைச்சிக் கழிவை இயற்கை உரமாக்கும் குன்னூர் நகராட்சி…

இது பற்றிப் பேசிய சிவகாசியைச் சேர்ந்த சரவணக்குமார், “ஸ்க்ரீன் பிரிண்டிங் இன்றும் பயன்பாட்டில் உள்ள பழைய அச்சிடும் முறைகளில் ஒன்று. மின்சாரமும் தேவையில்லை, மிஷின்களும் தேவையில்லை. அச்சின் மீது மை ஊற்றித் தேய்த்து எளிமையாக அச்சிடலாம். ஆரம்பத்தில் புத்தகங்கள் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட இந்த முறை, சிவகாசியில் தீப்பெட்டித் தொழில் வளர்ந்த போது தீப்பெட்டியின் பக்கவாட்டில் மருந்து வைக்க இந்த அச்சிடும் முறை முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.

இன்று இந்த முறையைப் பயன்படுத்தி மற்ற அச்சிடும் முறையைப் போல் புத்தகங்கள், பத்திரிகைகளையும் அச்சிட முடியும். ஆனால் அதற்கு அதிகமான நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற வழவழப்பான பரப்பில் அச்சிட இந்த முறை ஏற்ற ஒன்றாக உள்ளது. அதனாலேயே கண்ணாடிகள், வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் அச்சிட இந்த முறை தான் இன்றும் கையாளப்பட்டு வருகிறது” என்றார்.

மின்சாரம் தேவையில்லை, மிஷின்கள் பெரிதாகத் தேவையில்லை, பளபளப்பான தனித்துவமான அச்சுகள் என ஸ்க்ரீன் பிரிண்டிங்கில் இன்றும் சாதகமான விஷயங்கள் இருப்பதாலேயே இன்றும் ஸ்க்ரீன் பிரிண்டிங் உள்ளது. இன்று பெரும்பாலும் ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையில் வாகன ஸ்டிக்கர்கள், துணிப்பைகள், டீ சர்ட்டுகள், கேபிள்கள், சிறுசிறு துண்டுப் பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Virudhunagar,Tamil Nadu

First Published :

January 31, 2025 4:57 PM IST

Read More

Previous Post

ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே அரை சதம்.. 181 ரன்கள் குவித்து இந்திய அணி

Next Post

ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai

Next Post
ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai

ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin