ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்பது பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்களிடையே பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு சேமிப்பு திட்டமாக அமைகிறது. ஏனெனில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்கள் கிடைப்பதால் பெரும்பான்மையானவர்கள் இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் சந்தையுடன் தொடர்பில்லாதவை. மேலும் இந்த முதலீடு சந்தையுடன் தொடர்புடைய திட்டங்களான பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை காட்டிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
பிற முன்னணி வங்கிகளைப் போலவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களாகிய இருவருக்கும் பல்வேறு விதமான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகிறது.
ஒரு சில ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி 5 வருட ஃபிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 1,50,000 ரூபாய் வரையிலான வரி விலக்கு போன்ற பலன்களும் கிடைக்கின்றன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு ஓராண்டுக்கு 7.60% (400 அம்ரித் காலாஷ் திட்டத்தில்), 1 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.30%, 3 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25%, மற்றும் 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.50% வட்டி கொடுக்கப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் SBI சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 2 லட்ச ரூபாய் பணத்தை 1 வருடம், 3 வருடங்கள் மற்றும் 5 வருடங்களுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
SBI சீனியர் சிட்டிசன் 1-வருட FDல் 2 லட்ச ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட்டில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.30 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருவர் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்யும்போது ஒரு வருடத்திற்கு 15,005 ரூபாய் வட்டியாகவும், மெச்சூரிட்டியின்போது மொத்தமாக 2,15,005 ரூபாயும் கிடைக்கும்.
SBI சீனியர் சிட்டிசன் 3-வருட FDல் 2 லட்ச ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
மூன்று வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதம் கொடுக்கப்படுவதால் 2 லட்ச ரூபாய் முதலீட்டிற்கு ஒருவர் 48,109 ரூபாயை வட்டியாக பெறுவார். மெச்சூரிட்டியின்போது கிடைக்கும் மொத்த தொகை 2,48,109 ரூபாயாக இருக்கும்.
மேலும் படிக்க: PF இருப்பவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.50,000 இலவசமாக உங்கள் கணக்கில்
SBI சீனியர் சிட்டிசன் 5-வருட FDல் 2 லட்ச ரூபாய் முதலீட்டிற்கான ரிட்டன்
ஐந்து வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. எனவே அவர்கள் 2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 89,990 ரூபாயை வட்டியாக பெறுவார்கள். மேலும் மெச்சூரிட்டியின்போது கிடைக்கும் மொத்த தொகை 2,89,990 ரூபாயாக இருக்கும்.
.