Last Updated:
Savings scheme | குழந்தைகளுக்காக வெவ்வேறு திட்டங்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது பெற்றோரின் முக்கியமான கடமையாகும். இதற்காக பல சிறுசேமிப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிப்பதற்கான சிறந்த வழிகளைத் தேடுகிறீர்களா? குழந்தையின் கல்வி, திருமணம் அல்லது வாழ்வின் பிற முக்கிய நிகழ்வுகள் என எதுவாக இருந்தாலும் சரி, சரியான சேமிப்புத் திட்டத்தை வைத்திருப்பதும், வெவ்வேறு திட்டங்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதும் பெற்றோரின் முக்கியமான கடமையாகும். இதற்காக பல சிறுசேமிப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்கலாம்.
நிதி நிபுணர் பி.பத்மநாபன் என்பவர், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு, தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் ஆனது சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்துடன் ஒப்பிடும்போது இரட்டிப்பு வருமானத்தை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இது எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் வருமானத்தை வழங்குகிறது. குறிப்பாக இந்தத் திட்டமானது பெண்களுக்கு மட்டும் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு நன்மைகள் இருந்தபோதிலும், பல பெற்றோர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பற்றி இன்னும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர், எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்று கூறவில்லை. உங்கள் விருப்பம் போல் முதலீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டமானது, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம். பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கலாம். கணக்கு தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது 18 ஆண்டுகள் முடிந்த பிறகு ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளும்போது முழு தொகையையும் திரும்பப் பெறலாம். தற்போது 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கும்.
இதையும் படிக்க: HDFC தனிநபர் கடன் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கணுமா…? எளிதான டிப்ஸ் இதோ…!
ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS):
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதும் நல்ல நீண்ட கால பலன்களைத் தருகிறது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை உறுதியளிக்கின்றன. குழந்தைகளின் கல்வி அல்லது திருமண செலவுகளுக்காக சேமித்து வைப்பவர்களுக்கு இவை ஒரு சிறந்த வழி. 80Cஇன் கீழ் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் வரிச் சலுகைகள் இல்லை. ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும்போது வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
March 23, 2025 5:13 PM IST
Savings scheme | பெண் குழந்தையின் பெற்றோரா நீங்கள்..? பணம் சேமிக்க இந்த 2 திட்டங்களில் எது சிறந்தது தெரியுமா?


