LIVE NOW
Last Updated:
IPL 2025 Live | ஐபிஎல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழ்நாடு உடன் இணைந்திருங்கள்.
ஐபிஎல் தொடர்பாக இன்றைய (23.03.2025) செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
March 23, 20255:28 PM IST
இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்!
ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 6 ஓவர்களில் 94 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரமாக ஆடியது. ட்ராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரை சதம் விளாச, இஷான் கிஷன் 106 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 20 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்துள்ளது. இது ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
March 23, 20255:23 PM IST
IPL 2025 Live | இந்த சீசனின் முத்த செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய இஷான் கிஷன்!
ராஜஸ்தான் பந்துவீச்சை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளால் வெளுத்து வாங்கிய இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு சீசனில் முதல் செஞ்சுரியாக இது அமைந்தது.
March 23, 20254:19 PM IST
IPL 2025 Live | ட்ராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரை சதம்!
ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 6 ஓவர்களில் 94 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரமாக ஆடி வருகிறது. இந்நிலையில், முதல் போட்டியிலேயே அதிரடி காட்டி வரும் ட்ராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தி வருகிறார்.
March 23, 20254:17 PM IST
IPL 2025 Live | சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரம் ஆட்டம்!
ஐபிஎல் 18வது சீசனில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 6 ஓவர்களில் 94 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரமாக ஆடி வருகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 23, 2025 4:17 PM IST


