வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் சந்தேஷ்காலி விவகாரத்தில் ஆளும் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கை ஐகோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கியது.
மேற்கு வங்கத்தின், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனால், சந்தேஷ்காலியில் கடந்த ஜனவரியில் நடந்த தொடர் வன்முறை சம்பவங்களால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே ஷாஜஹான் ஷேக் மீது பல்வேறு தரப்பு பெண்கள் புகார் கூறியதையடுத்து அவர் சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரி கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஹரீஷ் டாண்டன், ஹிரன்மே பட்டாச்சார்யா ஆகியோர் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் மேற்குவங்க சி.ஐ.டி., போலீசில் ஆஜராக வந்த ஷாஜஹான் ஷேக்கை சி.பி.ஐ., தங்கள் கஸ்டிக்கு அழைத்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement