
Last Updated:
Same-Sex Marriage | மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.ஆர். காவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஒரே பாலின ஜோடிகள் பரஸ்பர சம்மத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என 2018ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் திருமணம் செய்வதற்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்க முடியாது என்று கடந்த 2023 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கு அங்கீகாரம் வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதி பி.ஆர். காவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க : அப்துல் கலாம் முதல் நாராயணன் வரை..! இஸ்ரோவை ஆண்ட தமிழர்கள்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரே பாலின ஜோடிகள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை என்று கூறினர். எனவே. இந்த வழக்கில் தலையிட தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
January 10, 2025 11:05 AM IST
Same-Sex Marriage | ஒரே பாலின திருமண அங்கீகாரம்: மறு ஆய்வு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

