Last Updated:
Eng vs Ind | முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களை எடுத்து ஏமாற்றத்தை அளித்த ரோகித் சர்மா, தொடரைத் தீர்மானிக்கும் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. தொடரை வெல்ல இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களை எடுத்து ஏமாற்றத்தை அளித்த ரோகித் சர்மா, தொடரைத் தீர்மானிக்கும் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
இங்கிலாந்திடம் ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஒருநாள் தொடரையாவது இந்திய அணி வெற்றியுடன் முடிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்தியாவுக்கு 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது. பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்களை குவித்தது இங்கிலாந்து.
இதன்பின் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் மற்றும் கில் கூட்டணி நல்ல ஓப்பனிங் கொடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். 77 ரன்கள் குவித்த நிலையில் கேப்டன் கில் விக்கெட்டாக ரோகித்துடன் இணைந்து விராட் கோலி கூட்டணி அமைத்தார். இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்தார்.
கடந்த சில தினங்களாக ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தது. இன்றைய போட்டியுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கடந்த சில தினங்களாக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் இன்றைய போட்டியில் 84 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார் ரோகித் சர்மா.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Jul 19, 2026 10:30 PM IST

