• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Republic Day 2025: குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Republic Day 2025: குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 26, 2025 8:08 AM IST

குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் தேசிய கொடி பறக்கவிடப்படும். ஆனால் கொடி ஏற்றப்படாது. இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பறக்கவிடப்படும் தேசிய கொடி

இந்தியாவின் முக்கிய அங்கமாக திகழும் தேசியக்கொடியை  குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் பறக்கவிடுவார். நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படுவது போல், குடியரசுதினமும் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்களிலும் தேசிய கொடி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இரண்டு நாட்களிலும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் வேறுபடும். குடியரசு தினத்தில் தேசிய கொடி ஏற்றப்படுவது இல்லை. அதற்கு பதிலாக தேசிய கொடி விரிக்கப்படும். இதன்பின் இருக்கும் வரலாறு என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியை பிரதமர் ஏற்றுவது வழக்கம். ஆனால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கொடி ஏற்றும் வழக்கம் கிடையாது. மாறாக ஏற்றிய கொடியை அவிழித்து பறக்க விடுவதுதான் வழக்கம்.

அதாவது நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்று விட்டது, இப்போது குடியரசு என்பதை அறிவிப்பதற்காகவே, இந்த நிகழ்ச்சி. இதில் இன்னொரு வித்தியாசம் என்னவெனில், சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்காக உரையாற்றுவார். ஆனால் குடியரசு தினத்தன்று நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்த்து அதைப் பறக்க விடும் செய்கையை மேற்கொள்வார். ஏனெனில் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் தலைவர் குடியரசுத் தலைவரே.

சுதந்திர தினத்தன்று தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தின கொடி பறக்கவிடும் நிகழ்வு டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெறும்.

மேலும் குடியரசுத் தினத்தன்று இந்திய முப்படைகளும் அணிவகுப்பு மேற்கொள்ளும். குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவார். இந்தியா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற தினம் சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகையில், குடியரசு தினம் இந்திய அரசியல் சட்டத்தை தழுவும் தினத்தைக் கொண்டாடுவதாகும்.

வரலாறு:

நமது சுதந்திர தினம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலையைக் கொண்டாடும் அதே வேளையில், குடியரசு தினம் என்பது நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பை நினைவுகூருகிறது. 1929 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியின் டொமினியன் அந்தஸ்தை எதிர்த்து இந்திய சுதந்திரப் பிரகடனத்தை (பூர்ண ஸ்வராஜ்) வெளியிட்டதால் ஜனவரி 26 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக தனது முதல் பதவியை தொடங்கினார்.

Also Read : இந்தியாவில் 1906 முதல் 1947 வரை மாற்றம் கண்ட தேசியக் கொடிகள்.. நீங்கள் பார்த்துள்ளீர்களா?

1950 இல் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கச் சட்டத்தை (1935) மாற்றியது. ஜனவரி 26, 1950 அன்று, இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, அரசியலமைப்பின் முக்கிய கொள்கைகளை முன்வைக்கும் அறிக்கை, நடைமுறைக்கு வந்தது. இது நாடு இறையாண்மை கொண்ட குடியரசாக மாறுவதை நிறைவு செய்தது.

இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் அவர்களின் அரசியல் நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பு நிறுவுகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களும் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படைக் கடமைகளையும் இது நிறுவுகிறது.

First Published :

January 26, 2025 8:03 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Republic Day 2025: குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!

Read More

Previous Post

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் : வெடித்தது சர்ச்சை!

Next Post

எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ்… 5 ஆண்டுகள் FD-க்கு இரண்டில் எது அதிக லாபத்தை வழங்குகிறது தெரியுமா?

Next Post
எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ்… 5 ஆண்டுகள் FD-க்கு இரண்டில் எது அதிக லாபத்தை வழங்குகிறது தெரியுமா?

எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ்... 5 ஆண்டுகள் FD-க்கு இரண்டில் எது அதிக லாபத்தை வழங்குகிறது தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin