Last Updated:
பகுதிநேர உதவியாளர்கள் மற்றும் கார் சுத்தம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்துள்ள உயிலின் மூலம் தெரியவந்துள்ளது.
ரத்தன் டாடா, தனது வீடு மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு என ரூ.3 கோடிக்கு மேலான சொத்துக்களை ஒதுக்கி வைத்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, அக்டோபர் 2024-ல் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, 7 வருடம் மற்றும் அதற்கு மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர்களுடைய சேவை காலத்திற்கு ஏற்ப இந்த தொகை பகிர்ந்தளித்து வழங்கப்பட வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.
அதேபோல, பகுதிநேர உதவியாளர்கள் மற்றும் கார் சுத்தம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் டாடா உயிலில் குறிப்பிட்டுள்ளார். டாடா தனது ரூ.3,800 கோடி சொத்துக்களில் பெரும்பகுதியை ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளை மற்றும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு வழங்கினார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, ரத்தன் டாடா தனது வீட்டில் நீண்டகாலமாக சமையல் செய்த ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதில் ரூ.51 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும்.
Also Read: தமிழகத்தில் அதிக வெப்ப அலை நாட்களை எதிர்பார்க்கலாம்.. இந்திய வானிலை மையம் அலர்ட்!
அவரது வீட்டில் சமையல் செய்த மற்றொரு சமையல்காரர் சுப்பையா கோனாருக்கு ரூ.36 லட்சம் கடன் தள்ளுபடி உட்பட ரூ.66 லட்சம் வழங்க கூறியுள்ளார். அதே நேரத்தில் அவரது செயலாளர் டெல்னாஸ் கில்டருக்கு மீதமுள்ள ரூ.10 லட்சத்தை வழங்க குறிப்பிட்டுள்ளார். டாடா தனது ஆடைகளை அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்றும் இதனால் அவை ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் ப்ரூக்ஸ் பிரதர் சட்டைகள், ஹெர்ம்ஸ் டைஸ், போலோ, டாக்ஸ் மற்றும் பிரியோனி சூட்கள் போன்ற பிராண்டுகளை அணிந்திருந்தார்.
கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக தனது நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடு வாங்கிய ரூ.1 கோடி கடனையும் அவர் தள்ளுபடி செய்துள்ளார். மேலும், தனது பக்கத்து வீட்டுகாரர் வாங்கிய கடன் மற்றும் அவரது ஓட்டுநர் ராஜு லியோன் வாங்கிய ரூ.18 லட்சம் கடன் உட்பட பிற கடன்களையும் தள்ளுபடி செய்தார். விலங்குகளை நேசிப்பவராக இருந்த ரத்தன் டாடாவின் செல்லப் பிராணி டிட்டோ உயிலில் சிறப்பு இடத்தை பிடித்துள்ளது. அதற்கு ரூ. 12 லட்சம் வழங்க குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ. 30,000 வழங்கப்படவுள்ளது. டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா பராமரித்து வருகிறார்.
April 02, 2025 11:43 AM IST