Last Updated:
வரும் 5 ஆம்தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் சென்னை டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி மற்றும் சென்னை அணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை அணி 2 புள்ளிகள் உடன் பாயின்ட்ஸ் டேபிளில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்ததாக பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் தோனி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
பெங்களூருக்கு எதிரான போட்டியின்போது, கடைசி ஓவர்களில் களமிறங்கிய தோனி, வெற்றி பெற அதிக ரன்கள் தேவையாக இருந்த போதும் முதல் சில பந்துகளில் டிஃபென்ஸ் செய்தார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றதால், ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதேபோன்று, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனி 9-ஆவது வீரராக களமிறங்கினார். அவர் ஏழாவது வீரராக 13-ஆவது ஓவரிலேயே களமிறங்கி இருந்தால் ரிசல்ட் மாறி இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்து நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனியின் ஆட்டம் சுமாராகவே இருந்தது. இந்த முறை ஏழாவது வீரராக களமிறங்கிய தோனி, 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது, சந்தீப் சர்மா வீசிய முதல் பந்திலேயே தோனி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க – MI vs KKR | அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்..! யார் இந்த அஷ்வினி குமார்?
தொடர் தோல்வியால் சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜடேஜா தனது பதிவில், “எல்லாம் மாறும்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் சென்னை அணியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை சரிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வரலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் அதிரடியான கம்பேக்கை சென்னை அணி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வரும் 5 ஆம்தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் சென்னை டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
April 02, 2025 4:04 PM IST
IPL 2025 : இனி தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்? – இன்ஸ்டாவில் பதிலளித்த ரவிந்திர ஜடேஜா


