• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து: இஸ்ரேல் முடிவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து: இஸ்ரேல் முடிவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்,அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பதவியேற்ற டிரம்ப், பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வரி விதிப்புகளை அமல்படுத்தி வருகிறார். கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார். பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தும் முடிவை டிரம்ப் அரசு எடுத்துள்ளது. இந்த வரி விதிப்புகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி டிரம்ப், புதிய வரி விதிப்பு திட்டம் ஒன்றை, சுதந்திர நாள் என்ற பெயரில் இன்று வெளியிடுகிறார்.

இந்த சூழலில் டிரம்ப் கூறும்போது, அமெரிக்க தயாரிப்பு கார்களுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பு வரிகளை குறைத்துள்ளது என்றார். இதனால், 2.5 சதவீதம் என்ற அளவில் வரிகள் இருக்கும். இந்தியாவும், பெரிய அளவில் வரிகளை குறைக்க போகிறது என சமீபத்தில் கேள்விப்பட்டேன். நீண்ட காலத்திற்கு முன்பே சிலர் ஏன் இதனை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

டிரம்பின் வரி விதிப்பு முடிவிற்கு இடையே, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா ஆகியன அமெரிக்கா மீது விதித்த வரிகளை குறைத்துள்ளன என செய்தி வெளியான சூழலில், இஸ்ரேலும் வரி ரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்காவை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதுபற்றி வெளியான செய்தியில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நிதி மந்திரி பிஜாலெல் ஸ்மோத்ரிச் மற்றும் பொருளாதார மற்றும் தொழில் துறை மந்திரியான நிர் பர்கத் உத்தரவின்பேரில் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து சுங்க வரிகளும் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கான நிதி குழு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ள இஸ்ரேல், அதன் முக்கிய வர்த்தக நட்புறவு நாடாகவும் உள்ளது. இதன்படி, 2024-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 1,730 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இதேபோன்று, சேவை ஏற்றுமதி 1670 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.



Read More

Previous Post

IPL 2025 : இனி தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்? – இன்ஸ்டாவில் பதிலளித்த ரவிந்திர ஜடேஜா

Next Post

Tamilmirror Online || ஒரு அதிகாரசபைக்கு எதிராக முறைப்பாடு

Next Post
Tamilmirror Online || ஒரு அதிகாரசபைக்கு எதிராக முறைப்பாடு

Tamilmirror Online || ஒரு அதிகாரசபைக்கு எதிராக முறைப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin