இந்நிலையில் அமைச்சர் தன் வியட்நாம் பயணத்துக்கு இடையே, தென் கொரியாவும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பாதுகாப்பு உற்பத்தி, கடற்படை ஒத்துழைப்பு மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து கேட்டறிய உள்ளார் அவர். ஏற்கெனவே உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை விரிவுபடுத்துவதற்காக இந்தியா கூட்டாண்மைகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மேலும், கடற்படை மற்றும் வர்த்தகக் கப்பல் கட்டுமானத்தில் தென் கொரிய நிறுவனங்கள் உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. எனவே அவர்களிடம் அதை கேட்டறிந்து, இந்தியத் திறன்களை அமைச்சர் விரிவுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


