முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று முன் தினம் தொடங்கின. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள், உலக பணக்காரர்கள், பெரும் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களை வரவேற்று பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, அனந்த் மற்றும் ராதிகாவுக்கு ஆசியை வழங்கும்படி கேட்டுகொண்டார். தனது மகன் அனந்த் உருவத்தில் தனது தந்தையை பார்ப்பதாகவும் உருக்கமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அனந்த் அம்பானி, தனது வாழ்க்கை மலர் படுக்கைகளால் நிறைந்தது அல்ல என்றார். உடல் நலக்குறைவால் தான் அவதியுற்றபோது, தந்தையும் தாயும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். அனந்த் அம்பானியின் பேச்சை, அவரது தந்தை முகேஷ் அம்பானி கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்து நெகிழ்ந்தார்.
வரவேற்புரையை தொடர்ந்து Cirque du Soleil என்ற கனட நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் அரங்கேறின. விலங்குகளுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்த கருப்பொருளில் இடம்பெற்ற பொழுது போக்கு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிரட்சியில் ஆழ்த்தின. வன் தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தின் சிறப்புகள் டிரோன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன
இந்த கொண்டாட்டத்தில் பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்தினார். அவர் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் அம்பானி குடும்பத்தினருடன் இணைந்து நடனமாடியது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. இரண்டாம் நாளான நேற்று ’Mela Rouge’ என்ற கருப்பொருளுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முன்னதாக, விருந்தினர்கள் அனைவரும் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான வன் தாராவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். வனப்பகுதிக்குள் நடந்து சென்று வனவிலங்குகளை பார்வையிட்டனர்.
அதன்பின் உலக புகழ்பெற்ற டேவிட் பிளைனின் மேஜிக் நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தில்ஜித் தோஜன்ஜின் இசை கச்சேரியில் அம்பானி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்களும் பாடல் பாடி அசத்தினர். அனந்த் அம்பானி, ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின்
இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…