Last Updated:
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 89.83% வாக்குகள் பதிவாகின.
யூனியன் பிரதேசத்தில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. அதேபோல், எதிரணியான காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்துள்ளது. தமிழ்நாட்டை போலவே யூனியன் பிரதேசத்தில் தவெக தனித்து களம் கண்டுள்ளது.
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 தொகுதிகள் தேவை. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. Axis My India நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் என்.டி.ஏ. 16 முதல் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 8 தொகுதிகளிலும், தவெக 2 முதல் 4 தொகுதிகளிலும் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், Peoples Pulse நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் என்.டி.ஏ. 16 முதல் 19 தொகுதிகளிலும் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என சொல்லப்பட்டுள்ளது.
Puducherry (Pondicherry)
Puducherry Exit Poll Results | புதுச்சேரி: ஆட்சி அமைக்க யாருக்கு வாய்ப்பு? தவெகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான கருத்துக் கணிப்பு


