வழக்கு விவரம்… இது விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் தொடர்பான வழக்கு. 2002-ஆம் ஆண்டில், ஒரு முதிய பெண்மணி தனது சொத்தை தனது பேத்தி ஒருவருக்கு எழுதி வைத்தார். திருமணமான அந்தப் பேத்தி, 2005-ஆம் ஆண்டில் வாரிசுகள் எவருமின்றி காலமானார். இதனைத் தொடர்ந்து, அந்த முதிய பெண்மணி தனது மற்றொரு பேத்திக்கு அந்தச் சொத்தை மாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், மறைந்த பேத்தியின் கணவர், அந்தச் சொத்திற்குத் தான் வாரிசு என்று கூறி சிக்கலை ஏற்படுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, இந்தச் சட்டப் போராட்டம் இறுதியில் உயர் நீதிமன்றம் வரை சென்றது.


