பல இடங்களில் மூடநம்பிக்கைகள் எந்த ஒரு காரணமும் இன்றி ஆழமாக நம்பப்பட்டு வருகிறது. அது ஒரு சில நேரங்களில் நன்மைகளுக்கும், சில நேரங்களில் தீமைக்கும் வழி வகுக்கலாம். கருப்பு நிற பூனை சாலையை கடந்தால் அது நமக்கு கெட்ட சகுனம் என்ற ஒரு மூடநம்பிக்கை இந்தியாவில் பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏணிக்கு கீழே நடப்பது கெட்ட அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக அமெரிக்காவில் நம்பப்படுகிறது. ஆனால் ஒரு சில நாடுகளில் சிவப்பு நிற மையில் எழுதுவது கூட தடை செய்யப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென் கொரியா, போர்த்துகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சிவப்பு நிற மையில் எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிவப்பு நிற மையில் எழுதினால் அவர் இறந்து விடுவார் என்ற என்று கூட தென்கொரியாவில் நம்பப்படுகிறது. ஆனால் இந்த மூடநம்பிக்கைக்கும் பின்னணியில் இருக்கக்கூடிய காரணம் என்ன? தென் கொரியாவில் சிவப்பு நிற மை என்பது தீங்காக கருதப்படுகிறது.
எனவே சிவப்பு நிற பேனாக்கள் பிள்ளைகளிடமிருந்து தள்ளி வைக்கப்படுகின்றன. ஒருவர் மற்றொருவர் பெயரை சிவப்பு நிற பேனாவில் எழுதினால் அந்த நபர் இறந்து விடுவார் என்ற மூடநம்பிக்கை அங்கு உள்ளது. எனவே தென் கொரியர்கள் தங்களது வீடுகளில் சிவப்பு நிற பேனாக்களை வைத்துக் கொள்வதில்லை. இந்த மூடநம்பிக்கையானது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சிவப்பு நிற மையை பயன்படுத்தினால் ஒருவர் இறந்து விடுவதற்கான சாத்தியம் உள்ளதா என்ன?
இதையும் படிங்க:
ஒரு நகர மக்களே நிலத்திற்கு அடியில் வீடு கட்டி வாழும் வினோதம்.. ஏன் தெரியுமா?
அறிக்கைகளின் படி, சிவப்பு நிற மையில் எழுதுவதால் இறப்பு ஏற்படாது. எனினும் பாரம்பரிய கொரிய கலாச்சாரத்தில் இறந்தவர்களின் பெயர்களை சிவப்பு நிற மை கொண்டு எழுதுவது வழக்கம். ஆகவே உயிருடன் இருப்பவர்களின் பெயரை இந்த பேனாவை கொண்டு யாரும் எழுத மாட்டார்கள். ஒரு நபர் மற்றொருவரின் பெயரை சிவப்பு நிற மையில் எழுதி விட்டால், அந்த நபர் இறந்து போக வேண்டும் என்று இவர் ஆசைப்படுவதாக நம்பப்படுகிறது. போர்த்துகளில் கூட சிவப்பு நிற மையில் எழுதுவது முரட்டுத்தனமாக கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாக பேசும் பொழுது, சிவப்பு நிறம் என்பது தென் கொரியாவில் இறப்பை குறிக்கிறது. எனவே இது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரியாவிலுள்ள ஜோசியான் சாம்ராஜ்யத்தை சேர்ந்த இளவரசர் சுயாங், சிவப்பு நிற மையை பயன்படுத்தி தான் கொல்ல வேண்டிய எதிரிகளின் பெயரை எழுதுவாராம். இதுவும் சிவப்பு நிறம் ஒதுக்கப்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. மற்றொரு கோட்பாட்டில், கொரிய போரின் போது இறந்த போர் வீரர்களின் பெயர்கள் சிவப்பு நிற மையை பயன்படுத்தி அகற்றப்பட்டது. ஆகையால் சிவப்பு நிறமானது இறப்பு போன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகளுடன் எளிதில் தொடர்பு படுத்தப்பட்டது; ஆகவே மக்கள் சிவப்பு நிறமையை பயன்படுத்துவதற்கு தயங்குகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…