போஸ்ட் ஆபிஸின் இந்த RD திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வீதம் முதலீடு செய்தால், நீங்கள் சேர்க்கும் மொத்த அசல் தொகை ரூ.3,60,000-ஆக இருக்கும். தற்போதைய 6.7% வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், வட்டி மூலமாகவே உங்களுக்கு ரூ.1,52,565 நிகர லாபம் கிடைக்கும். அதாவது, 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு உங்களுக்குக் கிடைக்கும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.5,12,565-ஆக இருக்கும்.


