Last Updated:
போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வு, அரசியல் அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி பொதுமக்கள் போராடி வருகின்றனர். அந்த வகையில் ராவலகோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேர் பேரணியாக சென்று, அரசின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
BIG – PoK Erupts in Protest.
Thousands of demonstrators from across Pakistan-occupied Jammu and Kashmir assembled in Rawalakot, voicing strong opposition to Pakistan’s rule and its policies in the region.Unprecedented scenes from POK !!
Anger has surged across the region… pic.twitter.com/qF5D03oYGv
— News Algebra (@NewsAlgebraIND) June 10, 2026
மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாப்பு படையினருடனான மோதலில் உயிரிழந்த 30 பேருக்கு நீதி வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 46 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PoK-வில் வெடித்த மக்கள் போராட்டம்…. பாகி. ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்!


