Last Updated:
பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் மறக்க மாட்டார்கள். மசோதா தோல்வியடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகுந்த வேதனை அளித்தது.
தெற்கு, வடக்கு என அனைத்து பகுதிகளும் இந்தியாவுக்கு தேவை என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
‘சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 528 உறுப்பினர்களில் 298 பேர் ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அரசியல் சாசன திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (352 வாக்குகள்) கிடைக்காததால், மசோதா தோல்வியில் முடிந்ததது.
இந்த நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு இரவு 8.30 மணியளவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமர் மோடி தனது உரையில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து மகளிர் மசோதாவை தடுத்துவிட்டன. மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் மறக்க மாட்டார்கள். மசோதா தோல்வியடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகுந்த வேதனை அளித்தது. பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான மாற்றங்களுடன் இணைக்கப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா’ (Delimitation Bill) குறித்து காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றன.
எந்த மாநிலமும் தனது பிரதிநிதித்துவத்தை இழக்காது என்றும், எந்தவொரு மாநிலத்திற்கான இடங்களின் பங்களிப்பும் மாறாது என்றும் அரசு தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்ற ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ அணுகுமுறையை காங்கிரஸ் இப்போதும் பின்பற்றி வருகிறது; அந்த அடிப்படையிலேயே இப்போதும் அக்கட்சி செயல்படுகிறது.
மசோதாவை தோல்வியடைய செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பெண்கள் மறக்கமாட்டார்கள். தெற்கு, வடக்கு என அனைத்து பகுதிகளும் இந்தியாவுக்கு தேவை. என்று பேசினார்.
Apr 18, 2026 10:01 PM IST

