• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Philippines earthquake | “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இந்தியா என்றும் துணையிருக்கும்” – பிரதமர் மோடி | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Philippines earthquake | “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இந்தியா என்றும் துணையிருக்கும்” – பிரதமர் மோடி | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 09, 2026 7:56 AM IST

பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இந்தியா என்றும் துணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் மோடி - பிலிப்பைன்ஸ்
பிரதமர் மோடி – பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆகப் பதிவானது. பள்ளித் தொடங்கிய முதல் நாளே பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், மாணவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். ஜெனரல் சாண்டோஸ் நகரத்தில் ஃபாஸ்ட் ஃபுட் உணவகமும் நிலநடுக்கத்தால் தரைமட்டமானது.

Terrifying visuals from another school, Lumigo Integrated School, where students and teachers experienced intense shaking during a magnitude 7.8 earthquake in Brgy. E. Alegado, Glan, Sarangani Province, Philippines.


State of Calamity Just Declared in General Santos City. pic.twitter.com/mQkMWzSSBp

— Weather Monitor (@WeatherMonitors) June 8, 2026

நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்தப் பகுதியில் 135-க்கும் மேற்பட்ட முறை தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. சாரங்கானி மாகாணம் போன்ற பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில இடங்களில் ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு கடல் அலை எழும்பிய நிலையில், சிறிது நேரத்துக்குப் பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இந்தியா என்றும் துணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளார். இதுதொடர்பான தன் பதிவில் அவர், “பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் பேரழிவுகள் பற்றி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா, பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறுதுணையாக நிற்கும்” என்றுள்ளார். போலவே அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

“நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இந்தியா என்றும் துணையிருக்கும்” – பிரதமர் மோடி

Read More

Previous Post

யாழ். போதனாவில் மீண்டும் குருதிக்குத் தட்டுப்பாடு

Next Post

LPG Gas | உங்கள் வீட்டில் 2 சிலிண்டர் இணைப்பு உள்ளதா..? ஷாக்கிங் நியூஸ்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
LPG Gas | உங்கள் வீட்டில் 2 சிலிண்டர் இணைப்பு உள்ளதா..? ஷாக்கிங் நியூஸ்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

LPG Gas | உங்கள் வீட்டில் 2 சிலிண்டர் இணைப்பு உள்ளதா..? ஷாக்கிங் நியூஸ்… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin