• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Pension Plan | எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் Vs டாடா ஏஐஏ ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம்: முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்….!

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Pension Plan | எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் Vs டாடா ஏஐஏ ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம்: முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்….!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், பலரும் எதிர்கால திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதில், ஓய்வூதிய திட்டங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தேசிய ஓய்வூதிய திட்டம், எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் போன்ற அரசின் ஓய்வூதிய திட்டங்கள் அமலில் இருந்தாலும், தனியார் நிதி நிறுவனங்களும் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றன.

ஓய்வூதியத் திட்டங்களின் அதிகரித்து வரும் தன்மையைக் கருத்தில் கொண்டு, சரியான முடிவை எடுப்பதற்கு முன்பாக வெவ்வேறு திட்டங்களின் அம்சங்கள் மற்றும் நன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. அந்த வகையில், எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் மற்றும் டாடா ஏஐஏ ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தையும், விரிவான ஒப்பீட்டையும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பொதுவாக, ஓய்வூதியத் திட்டங்கள் வழக்கமான வருமானத்தை வழங்குவதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு ஒரு தனிநபரின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, பணி காலம் முடிவடைந்த பிறகு வசதியான மற்றும் கவலையற்ற வாழ்க்கையை வாழ நம்பகமான ஓய்வூதியத் திட்டம் அவசியம்.

அந்த வகையில், சந்தையில் ஏராளமான ஓய்வூதியத் திட்டங்கள் இருந்தாலும், தனிநபர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். மேலும், இது சவாலானதாகவும் இருக்கலாம். இந்த வரிசையில் எல்ஐசி அதன் சொந்த ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனி நபர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்குகிறது.

எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம்: முக்கிய அம்சங்கள், நன்மைகள் மற்றும் விருப்பங்கள்

மத்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC), ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தைத் தேடும் தனிநபர் அல்லது குழுவிற்கு ஏற்ற ‘ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம்: முக்கிய அம்சங்கள்

  • சிங்கிள் பிரீமியமுடன் கூடிய உடனடி வருடாந்திரத் திட்டம்
  • தேவைகளுக்கு ஏற்றவாறு பரந்த அளவிலான வருடாந்திர விருப்பங்களைக் கொண்டுள்ளன.
  • சிங்கிள் லைஃப்பை கொண்ட வருடாந்திர திட்டம் மற்றும் ஜாய்ண்ட் லைஃப் திட்டம் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்வதற்கான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளது.
  • பிரீமியம் தொகையை செலுத்துவதற்கு ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திர விருப்பங்களை தேர்வு செய்யலாம்.
  • அதிக பிரீமியம் தொகை திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
  • ஏற்கனவே உள்ள பாலிசிதாரர் மற்றும் நாமினிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • பணம் அல்லது மேம்பட்ட வருடாந்திர விருப்பங்களைக் கொண்ட வருடாந்திர விருப்பங்கள் உள்ளன.
  • ஒருவேளை பாலிசிதாரர் இறக்கும் நிலையில், செலுத்த வேண்டிய தொகை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது தவணைகளிலோ வழங்கப்படும்.

இதையும் படிக்க: LIC’s Smart Pension Plan | எல்ஐசி-ன் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்: ஒரே ஒருமுறை முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பலன்…!

டாடா ஏஐஏ ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம்: அம்சங்கள், நன்மைகள் மற்றும் விருப்பங்கள்

டாடா ஏஐஏ அதன் பட்டியலில் ‘டாடா ஏஐஏ ஸ்மார்ட் பென்சன் செக்யூர்’ எனப்படும் ஒரு ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுள்ளது. இது ஒரு தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். மேலும், இது தனி நபர்கள் ஓய்வூதியத்திற்காக பணத்தை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் பென்ஷன் செக்யூர் மற்றும் ஸ்மார்ட் பென்ஷன் செக்யூர் பிளஸ் ஆகிய இரண்டு பிளான்களைக் கொண்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட வருமானத்துடன், ஓய்வு காலத்திற்கான நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இந்த திட்டமானது, ஜீரோ பிரீமியம் ஒதுக்கீடு கட்டணங்கள், லாயல்டி அடிஷன் மற்றும் முதிர்வு ஊக்கத் தொகைகள் போன்ற பல நன்மைகள் மூலம் ஒருவரின் ஓய்வூதிய சேமிப்பை மேம்படுத்துகிறது.

இதையும் படிக்க: நிலம், வீட்டை பதிவு செய்கிறீர்களா..? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியம்..!

பல முதலீட்டு நிதிகளில் இருந்து தேர்வு செய்யவும், உங்கள் பிரீமியம் செலுத்துதல்களை மாற்றியமைக்கவும் மற்றும் வரி நன்மைகளிலிருந்து பயனடையவும் இந்த திட்டம் உதவுகிறது. ஸ்மார்ட் பென்ஷன் செக்யூர் பிளஸ் விருப்பமானது, துரதிர்ஷ்டவசமான நிகழ்வு ஏதேனும் ஏற்பட்டால் பாலிசிதாரரின் இறப்புக்கு பிறகான பலனைப் பெறுவதை உறுதி செய்கிறது. மேலும், எதிர்கால பிரீமியங்களை டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் கவனித்துக் கொள்கிறது மற்றும் பாலிசி முதிர்வு வரை இது செயலில் இருக்கும். இதன் கூடுதல் அம்சங்களில் நிதியை மாற்றுதல், பிரீமியம் ரீடைரக்‌ஷன் மூலம் மேம்படுத்தப்பட்ட கவரேஜை வழங்குவதை உறுதி செய்கிறது.

மறுப்பு: எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பாக சான்றளிக்கப்பட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

First Published :

February 24, 2025 6:05 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Pension Plan | எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் Vs டாடா ஏஐஏ ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம்: முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்….!

Read More

Previous Post

“அஞ்சு வயசுல இப்படி ஒரு திறமையா” – கராத்தே போட்டியில் மாஸ் காட்டிய குட்டி வீரர்…

Next Post

ஜெர்மனி தேர்தல் | சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: ட்ரம்ப் பாணியில் வாக்குறுதி தந்து வென்ற மெர்ஸ்! | Who is Friedrich Merz, Conservative leader set to become new German Chancellor?

Next Post
ஜெர்மனி தேர்தல் | சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: ட்ரம்ப் பாணியில் வாக்குறுதி தந்து வென்ற மெர்ஸ்! | Who is Friedrich Merz, Conservative leader set to become new German Chancellor?

ஜெர்மனி தேர்தல் | சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: ட்ரம்ப் பாணியில் வாக்குறுதி தந்து வென்ற மெர்ஸ்! | Who is Friedrich Merz, Conservative leader set to become new German Chancellor?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin