Last Updated:
சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அனுப்பப்பட்டு, பயன்படுத்தப்பட்ட வெடிபொருளின் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்றது.
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சோதனைச் சாவடியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அனுப்பப்பட்டு, பயன்படுத்தப்பட்ட வெடிபொருளின் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன. இந்த தாக்குதலில், சுங்கத்துறை மற்றும் கலால் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனப்படும் பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்புடன் கூட்டணி கொண்டிருந்தாலும், இரு அமைப்புகளும் தனித்தனியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டு அதில் 21 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


