வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் ஜப்பான் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானம் உயர பறந்த போது அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் ஒசாகா நோக்கி 249 பயணிகளுடன் போயிங் 767 ரக விமானம் புறப்பட்டது. ஓடு தளத்தலிருந்து மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று கீழே விழுந்தது.
இதனை யாரோ ஒருவர் மொபைலின் வீடியோவாக பதிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கீழே விழுந்த சக்கரம் விமான நிலைய கார்பார்க்கிங் பகுதியில் விழுந்ததில் சில கார்கள் சேதமடைந்ததாகவும் ,உடனடியாக விமான பைலட்டிற்கு தகவல் தரப்பட்டது. பின்னர் உரிய பாதுகாப்புடன் லாஸ்ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement