மேலும் சாண்ட்ஹர்ஸ்ட் நடவடிக்கை குறித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவின் பொறுமை அதன் பலவீனம் அல்ல. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. வியூகம், நிதானம் மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை பிரதிபலிப்பவை. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்குப் புகலிடம் அளிப்பவர்களுக்கும் எதிரான ராணுவத்தின் நடவடிக்கை அது. இந்த நடவடிக்கையானது, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது” என்றார்.


