பிறப்பு, இறப்புச் சான்றிதழ் விதிகளில் மாற்றம்: பிறப்பு அல்லது இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய மாற்றம் வரவுள்ளது. ‘பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தச்) சட்டம், 2026’ அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி, பதிவு செய்ய வேண்டிய காலக்கெடு முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனால், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்படும் பட்சத்தில், பதிவை மேற்கொண்டு தொடர்வதற்கு முன் அதில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை சம்பந்தப்பட்ட நபர் உறுதிப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்படும் நேர்வுகளில், ‘முதல் வகுப்பு நீதித்துறை நடுவரிடமிருந்து’ (Judicial Magistrate First Class) பெறப்பட்ட உத்தரவு தேவைப்படும். அதாவது, இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கும்.


