• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பங்குச்சந்தையை தாக்கிய சூறாவளி.. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் முதலீட்டாளர்கள் | Indian Stock Market Crash: What are the five Reasons Behind Sensex 900-Point Fall and Nifty Drop

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பங்குச்சந்தையை தாக்கிய சூறாவளி.. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் முதலீட்டாளர்கள் | Indian Stock Market Crash: What are the five Reasons Behind Sensex 900-Point Fall and Nifty Drop
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Published: Monday, September 28, 2026, 18:28 [IST]

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை பயங்கர பிரஷர் ஏற்பட்டது. வர்த்தகம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டி 50 குறியீடு சரிந்து 23,000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7வது வாரமாக சரிவை பதிவு செய்திருந்த நிலையில், இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களின் கவலையை மேலும் அதிகரித்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க வட்டி வருவாய் அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்திய சந்தையை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட பல காரணங்கள் இந்த சரிவுக்கு காரணமாக இருக்கிறது. இன்று காலை மட்டும் சந்தையின் மதிப்பில் சுமார் ரூ.4.9 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. மாலை வரையிலும் சந்தை தொடர்ந்து சரிந்த நிலையில், இழப்பு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியிருக்கும் என தெரிகிறது. இதற்கு முக்கிய காரணங்களை நாம் பார்க்கலாம்!

Indian Stock Market Crash

1. மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

இந்திய முதலீட்டாளர்களுக்கு மிக பெரிய கவலைகளில் ஒன்றாக கச்சா எண்ணெய் விலை மாறியுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கு மேல் தொடர்கிறது. இந்தியா தனது எண்ணெய் தேவையின் கணிசமான பகுதியை இறக்குமதி செய்வதால், கச்சா எண்ணெய் விலை உயர்வது நாட்டின் இறக்குமதி செலவையும் பணவீக்க அழுத்தத்தையும் அதிகரிக்கலாம்.

மேலும் இது ரூபாய் மீது பிரஷரை அதிகரிப்பதோடு, எரிபொருள் மற்றும் போக்குவரத்தை அதிகம் சார்ந்துள்ள நிறுவனங்களையும் பாதிக்கும். இதுவே இன்றைய தினம் பங்குச்சந்தை சரிய முக்கிய காரணம்.

2. அமெரிக்க வட்டி வருவாய் உயர்வு

அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் வட்டி வருவாய் கணிசமாக உயர்ந்திருப்பதும் இந்திய பங்குச்சந்தைக்கு சிக்கலை கொடுத்துள்ளது. அமெரிக்க பத்திரங்களில் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்போது, வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள முதலீட்டை எடுத்து அமெரிக்க பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் நீடித்தால், அமெரிக்க வட்டி விகிதங்கள் நீண்ட காலத்துக்கு அதிகமாகவே இருக்கலாம் என்ற கவலையும் உள்ளது.

3. வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். பத்திர வருவாய், கச்சா எண்ணெய் விலை மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவற்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து பணத்தை எடுத்து வருகிறார்கள். இதன் தாக்கம் நேரடியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் எதிரொலிக்கிறது.

4. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்

இன்றைய தினம் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டிலும் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் கணிசமாக உள்ளன. எனவே, இந்த நிறுவனங்களின் பங்குகள் ஒரே நேரத்தில் சரியும்போது, சரிவு மிக மோசமாக மாறுகிறது. இதுவும் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

தங்கம் vs பங்குச்சந்தை.. 2027ல் நாம் என்ன செய்ய வேண்டும்? சீக்ரெட்டை உடைத்த ஆனந்த் சீனிவாசன்

தங்கம் vs பங்குச்சந்தை.. 2027ல் நாம் என்ன செய்ய வேண்டும்? சீக்ரெட்டை உடைத்த ஆனந்த் சீனிவாசன்

5. ‘ரிஸ்க்-ஆஃப்’ மனநிலை

உலகளாவிய சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் இந்திய பங்குச்சந்தையை பாதித்துள்ளது. அமெரிக்கா ஈரான் பதற்றம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதுடன், சர்வதேச முதலீட்டாளர்களின் கவலையையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க பத்திரங்களின் வருவாய் உயர்வும் முதலீட்டாளர்களை அதிக ரிஸ்க் கொண்ட சொத்துகளில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்ட செய்கிறது. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் இருந்து அவர்கள் வெளியேறி வருகிறார்கள்.

இந்த 5 காரணங்களும் தான் இந்திய சந்தையை புரட்டி போட்டுவிட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் இதனால் 5 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

English summary

Sensex fell more than 900 points within an hour of market opening, while the Nifty 50 slipped below 23,000(இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு): Indian Stock Market Crash latest news in tamil.

Read More

Previous Post

நாமலின் பெயரைக் கண்டு அஞ்சுகிறதாம் அரசாங்கம்

Next Post

October New Rules | சிலிண்டர் முதல் யுபிஐ வரை; அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
October New Rules | சிலிண்டர் முதல் யுபிஐ வரை; அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

October New Rules | சிலிண்டர் முதல் யுபிஐ வரை; அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin