தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து அனுமதிப்பத்திரங்கள் வழங்கியதில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றாமல், முறைகேடான முறையில் மூன்றாம் தரப்பினருக்கு 56 தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பயணிகள் சேவைக் அனுமதிப்பத்திரங்களை ரேணுக பெரேரா வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணை மையக் கொண்டுள்ளதாக CIABOC தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் 19, 2014 அன்று அமைச்சரவை எடுத்த முடிவின் பரிந்துரைகளைப் புறக்கணித்தமை மற்றும் அவசியமான வருடாந்திர உரிமக் கட்டணங்களை வசூலிக்கத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்னாள் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு குறிப்பிடத்தக்க அளவு சட்டவிரோத நிதி இழப்பு ஏற்பmC உள்ளதோடு, தனியார் பேருந்து இயக்காளர்களுக்கு முறையற்ற நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

