• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விடிந்தால் ஐபோன் 18 லான்ச்.. சென்னை விமானம் நிலையம் படும் பிசி.. சார்ட்டர் விமானத்தில் ஏற்றுமதி! | iPhone 18 Pro Global Launch: Chennai Airport Busy as Made-in-India Pro Models Ship via Charter Flights

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விடிந்தால் ஐபோன் 18 லான்ச்.. சென்னை விமானம் நிலையம் படும் பிசி.. சார்ட்டர் விமானத்தில் ஏற்றுமதி! | iPhone 18 Pro Global Launch: Chennai Airport Busy as Made-in-India Pro Models Ship via Charter Flights
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விடிந்தால் ஐபோன் 18 லான்ச்.. சென்னை விமானம் நிலையம் படும் பிசி.. சார்ட்டர் விமானத்தில் ஏற்றுமதி!

உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் கடந்த வாரம் தனது புதிய ஐபோன் 18 Pro மற்றும் ஐபோன் 18 Pro Max மாடல்களை அறிமுகம் செய்த நிலையில் நாளை அதிகாரப்பூர்வமாக சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலகமே சென்னை விமான நிலையத்தை நம்பியுள்ளது என்றால் மிகையில்லை.

இந்தியாவில் ஆப்பிள் கருவிகளின் உற்பத்தியை துவங்கிய நாளில் இருந்து பல மாடல்களை தயாரித்து இருந்தாலும், முதல் முறையாக ப்ரோ மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்யும் நாளுக்கு முன்னதாகவே தயாரிக்கப்பட்டு சென்னையில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு அனுப்புகிறது இந்தியா.

விடிந்தால் ஐபோன் 18 லான்ச்.. சென்னை விமானம் நிலையம் படும் பிசி.. சார்ட்டர் விமானத்தில் ஏற்றுமதி!

தற்போது சென்னை விமான நிலையத்தில் பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த ஐபோன் 18 Pro மற்றும் ஐபோன் 18 Pro Max மாடல்களை சார்ட்டர் விமானத்தில் உலக நாடுகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஒரு வாரமாக ஆப்பிள் தனது குளோபல் லான்ச்-க்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. சென்னையில் இருந்து அனுப்பப்படும் ஐபோன் 18 சீரியஸ் போன்கள் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் அனைத்து சந்தைகளிலும் நாளை காலை விற்பனை துவங்குவதற்குள் உரிய இடத்தில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதால் ஆப்பிள் தொழிற்சாலைகள் விடிய விடிய பணியாற்றி வருகிறது.

இதனால் ஆப்பிள் சப்ளை செயின் பிரிவுக்கு அடுத்த 24 மணிநேரம் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது. தற்போது இந்தியாவில் உள்ள iPhone 18 Pro மற்றும் Pro Max மாடல் போன்களை ஒசூரில் இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

இவ்விரு தொழிற்சாலைகளிலும் முதல் நாள் விற்பனை மற்றும் அதற்கான டிமாண்ட் அடிப்படையில் ஐபோன் 18 அசம்பிளி லைன்-ஐ 12 வரையில் விரிவாக்கம் செய்ய தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளையில் இந்த ஆண்டு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 18 சிரியஸ் மாடல் போன்கள் ஆப்பிள் ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈகாமர்ஸ் தளத்தை தாண்டி அறிமுக நாளிலேயே குவிக் காமர்ஸ் தளத்தில் விற்பனை செய்யப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனால் செப்டோ, பிக் பேஸ்கட், பிளிங்இட் உட்பட பெரும்பாலான குவிக் காமர்ஸ் தளத்தில் விற்பனை செய்ய துவங்கப்பட்டு உள்ளதால், ஆர்டர் செய்த அடுத்த 1 மணிநேரத்தில் உங்கள் கையில் போன் இருக்கும். இதனால் இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வாசலில் காத்திருக்கும் நிலை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone போன்ற அதிக விலை கொண்ட பொருட்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டு குளோபல் லான்ச்-க்காக உலக சந்தைகளுக்கு அனுப்பும் அளவுக்கு தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன் வளர்ந்திருப்பது முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சென்னை விமான நிலையம் வழியாக செல்கிறது என்பது அடுத்த முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஐபோன் போலவே தற்போது சென்னையில் விலை உயர்ந்த லேப்டாப், கம்பியூட்டர் ஹார்வேர்களும் தயாரிக்கப்படும் வேளையில்.. இதன் உலகளாவிய சப்ளை செயினை மேம்படுத்த சென்னை விமான நிலையத்தின் Air Cargo Infrastructure-ஐ மேலும் வலுப்படுத்த வேண்டிய உருவாகியுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share This Article

English summary

iPhone 18 Pro Global Launch: Chennai Airport Busy as Made-in-India Pro Models Ship via Charter Flights

iPhone 18 Pro Global Launch: Chennai Airport Busy as Made-in-India Pro Models Ship via Charter Flights — விடிந்தால் ஐபோன் 18 லான்ச்.. சென்னை விமானம் நிலையம் படும் பிசி.. சார்ட்டர் விமானத்தில் ஏற்றுமதி!

Story first published: Thursday, September 17, 2026, 15:04 [IST]

Other articles published on Sep 17, 2026

Read More

Previous Post

’NTC’ முன்னாள் தலைவர் CIABOC யினரால்கைது

Next Post

நாடு முழுவதும் 28 பகுதிகளில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்றின் தரம் பதிவாகியுள்ளது – Malaysiakini

Next Post

நாடு முழுவதும் 28 பகுதிகளில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்றின் தரம் பதிவாகியுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin