NSE IPO: ரூ.30,000 கோடி ஜாக்பாட்!! இன்போசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ அஸீம் பிரேம்ஜி காட்டில் பணமழை!!
நடப்பு ஆண்டில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு ஐபிஓ, இந்திய தேசிய பங்கு சந்தையான NSE வெளியிட்டுள்ள ஐபிஓ. இந்தியாவின் முன்னணி பங்கு சந்தையான தேசிய பங்குச் சந்தை தனது ஐபிஓ-வை வெளியிட்டு பொது நிறுவனமாக மாற உள்ளது.
NSE IPO விண்ணப்ப தேதிகள் முடிந்துவிட்டன. ஒரு பங்கின் விலை 1700 ரூபாயில் இருந்து 1785 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 8 பங்குகள் வீதம் 13,600 ரூபாய் கொடுத்தால் ஒரு லாட் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. விற்பனைக்கு வரும் பங்குகளை பெற 5.69 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் வியாழன் அன்று ஐபிஓ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

பலரும் போட்டி போட்டு கொண்டு இந்த ஐபிஓவில் பங்குகளை பெற விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஐபிஓ வெளியீடு பலரையும் கோடீஸ்வரராக்க உள்ளது. குறிப்பாக இந்த ஐபிஓ மூலம் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, விப்ரோ நிறுவனத்தின் அஸீம் பிரேம்ஜி உள்ளிட்ட பல முன்னணி தொழிலதிபர்கள் சுமார் 30,000 கோடி ரூபாயை வரை லாபம் பெற போகின்றனர்.
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அஸீம் பிரேம்ஜியின் முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தில் 5.82 கோடி பங்குகளை வைத்துள்ளது. ஒரு பங்கின் விலை 1785 ரூபாய் என பட்டியலிடப்படும் என வைத்து கொண்டால் கூட இதன் மதிப்பு 10,000 கோடி ரூபாயை தாண்டிவிடும்.
அதே போல இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் குடும்ப அலுவலகமான Catamaran மூலமாக என்எஸ்இ-யில் 38.5 லட்சம் பங்குகளை வைத்துள்ளார். இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் இவர் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 780 கோடி ரூபாயாக உயரும்.
இந்தியாவின் புகழ்பெற்ற சில்லறை வர்த்தக நிறுவனமான டி-மார்ட் நிறுவனரும், பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராதாகிருஷ்ணன் தமாணியின் வசம் 3.9 கோடி என்.எஸ்.இ பங்குகள் உள்ளன, இதன் மதிப்பு 6,856 கோடி ரூபாயாக உயரும்.
ஹீரோ குழுமத்தின் சுனில் காந்த் முஞ்சால், இன்போசிஸ் துணை நிறுவனர் கிரிஸ் கோபால கிருஷ்ணன் என தொடக்கத்தில் தேசிய பங்குச்சந்தையை நம்பி பணம் போட்ட அனைவருமே இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் பல கோடிகளை லாபமாக பெற உள்ளனர்.
தேசிய பங்குச் சந்தையின் இந்த ஐபிஓ-வின் ஒட்டுமொத்த மதிப்பீடு தோராயமாக 30,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆஃபர் ஃபால் சேல் முறையில் சுமார் 8.86 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. நிச்சயம் பங்குச்சந்தையில் பட்டியலிடும் போது லாபத்தில் தான் பட்டியலிடப்படும் என சொல்லப்படுகிறது. இதில் பங்கு ஒதுக்கீடு பெற்றவர்கலுக்கு நாளை இரவுக்குள் டீமேட் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும், கிடைக்காதவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் மீண்டும் வங்கி கணக்கிற்கே வ்ந்து சேர்ந்துவிடும் என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

