• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மறந்துபோன கடவுச்சொல்… நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மறந்துபோன கடவுச்சொல்… நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கணினி உபகரணங்களுக்கான கடவுச்சொற்களை வழங்கத் தவறியமை தொடர்பில் நேற்று நீதிமன்றில் நீண்ட விவாதம் இடம்பெற்றது.



சலே முதலில் பயன்படுத்திய மடிக்கணினி தனது மகளுக்குச் சொந்தமானது எனக் கூறி, அதன் கடவுச்சொல்லை வழங்க மறுத்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது.

பின்னர் தொடர்ந்தும் கடவுச்சொல்லை வழங்காமல் தவிர்த்து வந்ததாகவும் மேலும் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

சலேவுக்கு மறந்துபோன விடயம்

இதன்படி சலேவின் பதில்கள் மற்றும் அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த மடிக்கணினி உடனடியாக பொறுப்பேற்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள் | Barrage Of Questions Posed To Saleh S Side Court

இதற்கு பதிலளித்த சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்து பெர்னாண்டோ,

புலனாய்வு அதிகாரியாக இருந்த சலே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடவுச்சொற்களை மாற்றும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.



இதனால் ஒரு வாரத்திற்கு முன்னர் பயன்படுத்திய கடவுச்சொல் கூட அவருக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம் எனவும், பல மாதங்களுக்கு முன்னர் பயன்படுத்திய கடவுச்சொற்கள் நினைவில் இல்லாதிருப்பது அசாதாரணமான விடயம் அல்ல எனவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், சலே தற்போது கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறினார்.

கடவுச்சொல்லை வழங்காவிட்டால்



தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த ஒருவருக்கு நினைவாற்றல் முக்கியமானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், சலே கடவுச்சொல்லை வழங்காவிட்டால், அதனைப் பெற்றுக்கொள்வதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் அரச தரப்புக்கு உள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

மறந்துபோன கடவுச்சொல்... நீதிமன்றில் சலே தரப்பிடம் எழுப்பப்பட்ட சரமாரி கேள்விகள் | Barrage Of Questions Posed To Saleh S Side Court

இதனிடையே, சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.


அவருக்கு அண்மையில் இதயத்தில் மருத்துவ சாதனம் பொருத்தும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக சுமார் 40 இலட்சம் ரூபாய் அரச நிதி செலவிடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சலே தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களிடம் விசாரணை


மேலும், தற்போது அவரது பற்கள் தொடர்பான பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பல் பிரச்சினை அவரது இதய நிலைமையுடன் தொடர்புடையது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சலேவுக்கு விசேட சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியது.



எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர், சலேயை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துச் சென்று வழக்கமான விசாரணைகள் மற்றும் கேள்விகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அரச தரப்பு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.


மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்காலத்தில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச தரப்பு தெரிவித்தது.


இந்த விடயம் தொடர்பில் தகவல்கள் அறிந்துள்ள ஊடகவியலாளர்களிடமிருந்தும் தேவையான தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அரச தரப்பு நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

NSE IPO: ரூ.30,000 கோடி ஜாக்பாட்!! இன்போசிஸ் நாராயணமூர்த்தி, விப்ரோ அஸீம் பிரேம்ஜி காட்டில் பணமழை!! | NSE IPO: ₹30,000 Cr Wealth Boom as Narayana Murthy, Azim Premji, Damani Hold Stakes Ahead of Thursday Listing

Next Post

AI யூஸ் பண்ணுங்க.. ஆனா இத மட்டும் பண்ணிடாதீங்க..!! ஐடி ஊழியர்களுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!! | “Use AI, But Don’t Surrender Your Understanding”: Zoho Founder Sridhar Vembu Reacts to Viral X Post on AI Coding

Next Post
AI யூஸ் பண்ணுங்க.. ஆனா இத மட்டும் பண்ணிடாதீங்க..!! ஐடி ஊழியர்களுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!! | “Use AI, But Don’t Surrender Your Understanding”: Zoho Founder Sridhar Vembu Reacts to Viral X Post on AI Coding

AI யூஸ் பண்ணுங்க.. ஆனா இத மட்டும் பண்ணிடாதீங்க..!! ஐடி ஊழியர்களுக்கு Zoho ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!! | “Use AI, But Don’t Surrender Your Understanding”: Zoho Founder Sridhar Vembu Reacts to Viral X Post on AI Coding

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin