Last Updated:
நாட்டின் முப்படைகளின் 3-ஆவது தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணியை நியமனம்.
நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் புதிய முப்படைத் தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த சுப்பிரமணி, 37 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்து வந்தார்.
என்.எஸ்.ராஜா சுப்பிரமணி
குறிப்பாக, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நாட்டின் முப்படைகளின் 3-ஆவது தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணியை நியமிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதே போன்று, இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதியாக இருக்கும் தினேஷ் திரிபாதிக்கு பதிலாக வரும் 31 ஆம் தேதி கிருஷ்ணா சுவாமிநாதன் பதவியேற்க உள்ளார்.
May 09, 2026 11:25 AM IST


