• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

NPS Vatsalya Yojana Scheme | உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமா…? இந்த திட்டம்தான் சிறந்த வழி…!

GenevaTimes by GenevaTimes
February 16, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
NPS Vatsalya Yojana Scheme | உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமா…? இந்த திட்டம்தான் சிறந்த வழி…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 16, 2025 10:39 AM IST

NPS வாத்சல்யா யோஜனா என்பது நீண்ட கால முதலீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 18 வயதை அடையும் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம்.

News18News18
News18

அதிகரித்து வரும் கல்விச் செலவு ஒவ்வொரு பெற்றோருக்கும் கவலையளிக்கும் விஷயமாகும். இன்றைய காலக்கட்டத்தில் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பதில் அவர்கள் பெரும்பாலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கலைத் தீர்க்க, இந்திய அரசாங்கமானது கடந்த ஆண்டு NPS வாத்சல்யா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும், குழந்தைகளுக்காகச் சேமிக்கும் பழக்கத்தை பெற்றோரிடம் வளர்ப்பதும் இதன் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தில், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய முடியும். இந்த சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்கவும், குழந்தை 18 வயதை அடைந்தவுடன் கல்வி மற்றும் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு நல்ல கார்பஸை உருவாக்கவும் உதவுகிறது.

NPS வாத்சல்யா திட்டம் என்றால் என்ன?

NPS வாத்சல்யா யோஜனா என்பது நீண்ட கால முதலீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 18 வயதை அடையும் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதே சமயம் முதலீடு தொடர்பாக எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை. இத்திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் எளிதாக பணத்தை சேமிப்பதோடு, எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும் பயன்படுத்த முடியும்.

NPS வாத்சல்யா அக்கௌன்ட்-ஐ, ரெகுலர் NPS அக்கௌன்ட்டாக மாற்ற முடியுமா?

  • உங்கள் குழந்தை 18 வயதை அடைந்தவுடன், இந்த அக்கௌன்ட்-ஐ என்பிஎஸ் அல்லது வேறு என்பிஎஸ் அல்லாத திட்டமாக மாற்றலாம்.
  • இந்த செயல்பாட்டில், குழந்தை 18 வயதை நிறைவு செய்த தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய KYC செயல்முறையை முடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதையும் படிக்க: உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறீர்களா? இந்த தவறை செய்தால் உங்கள் பணத்தை இழக்க நேரிடும்… என்ன தெரியுமா?

உங்கள் குழந்தைகளுக்காக NPS வாத்சல்யா திட்ட அக்கௌன்ட்-ஐ திறப்பது எப்படி?

என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தில் அக்கௌன்ட்-ஐ திறப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது.

  1. முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான https://npstrust.org.in/open-nps-vatsalya-ஐப் பார்வையிடவும்.
  2. பின்னர், நீங்கள் Protean, Kfintech அல்லது CAMS ஆகிய மூன்று CRAகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
  3. நீங்கள் CAMSஐக் கிளிக் செய்தால், ஒரு புதிய டேப் திறக்கும். அங்கு நீங்கள் ரெஜிஸ்டிரேஷன் செயல்முறையை முடிக்க வேண்டும்.
  4. இந்த செயல்பாட்டில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பாதுகாவலரின் பெயர், பான் எண், பிறந்த தேதி, ஈமெயில் ஐடி, மொபைல் எண் போன்ற தகவல்களை நீங்கள் என்டர் செய்ய வேண்டும்.
  5. அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, “NPS வாத்சல்யா அக்கௌன்ட் ஓபன்” என்பதை கிளிக் செய்யவும், உங்கள் அக்கௌன்ட் வெற்றிகரமாக திறக்கப்படும்.

இதையும் படிக்க: Personal loan | தனிநபர் கடன் சலுகைகளை எவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பது…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

இந்த அக்கவுன்ட்டானது குழந்தையின் பெயரில் திறக்கப்படும். ஆனால், குழந்தை 18 வயது அடையும் வரை இந்த அக்கவுன்ட் பாதுகாவலரால் நிர்வகிக்கப்படும். இந்த செயல்பாட்டின்போது, ​​இந்தக் கணக்கின் ஒரே பெனிபிசியரி குழந்தை மட்டுமே என்பது உறுதி செய்யப்படுகிறது.

First Published :

February 16, 2025 10:38 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

NPS Vatsalya Yojana Scheme | உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமா…? இந்த திட்டம்தான் சிறந்த வழி…!

Read More

Previous Post

‘முன் அனுமதி பெறாமலேயே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதா’ அன்புமணி ராமதாஸ்

Next Post

Pope Francis | போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார்.. புனித பீட்டர்ஸ் தேவாலயம் தகவல்..!

Next Post
Pope Francis | போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார்.. புனித பீட்டர்ஸ் தேவாலயம் தகவல்..!

Pope Francis | போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார்.. புனித பீட்டர்ஸ் தேவாலயம் தகவல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin