சட்டம்-ஒழுங்கு, உள்கட்டமைப்பு, நலத்திட்டங்களைச் சென்றடைதல், சுகாதார உள்கட்டமைப்பு, கல்வி உள்கட்டமைப்பு, ஊழல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய ஏழு ஆளுமை மற்றும் மேம்பாட்டு அளவீடுகள் இதில் கணக்கில் கொள்ளப்பட்டன. மேலும், சமீபகால பொது விவாதங்களில் இடம்பெற்ற முக்கிய விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக ‘ஜென்-இசட்’ (Gen-Z) தலைமுறை மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் ராம் மந்திர் நன்கொடைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் மக்களின் கருத்துகள் இந்த ஆய்வில் ஆராயப்பட்டன.


